திருச்சி:திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தமிழ்நாட்டின் பேருந்து சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசித்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக மேலாண்மை இயக்குநர் சு.சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் திரு.வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.