
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை, கீரமங்கலம் மற்றும் கிருஷ்ணா நகரில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டு மின்சாதனங்கள் பழுதடையும் சிரமத்திற்குள் உள்ளாகினர்.

இந்த நிலை தொடராமல் இருக்க, பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிணங்க, பிச்சாண்டார்கோவில் மின்சார வாரியத்தின் இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் துரைராஜின் மேற்பார்வையில், மின்சார வாரிய ஊழியர்கள் 110 கிலோவாட் திறனுடைய இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை கீரமங்கலம், கிருஷ்ணா நகர் மற்றும் சாய்நகர் பிரிவு சாலைகளில் நிறுவினர்.

இத்தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தனது நன்றியை தெரிவித்தனர்.
