
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் கீழ், திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் தலைமையிலாக, மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு, இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் M. முஹமது ஷரிப் (M.Com, M.Phil) கலந்து கொண்டு, இளைஞர் அணியின் அவசியம், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
கூட்டத்தில் இளைஞர் அணியின் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், அரசியல் பயிலரங்கம், மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், அஸ்பாக், சாகுல் ஹமீத், சதாம் உசேன், முஹம்மத், அசார், சாதிக் மற்றும் நிர்வாகிகள் பஷாரத் நியாஸ், ஷேக், ஜாக்கீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

