கோவை:ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டை ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி மற்றும் பி.எஸ்.ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னெடுத்தனர்.
காவலரான அன்னபூர்ணா உணவகங்களின் தலைவர் D. சீனிவாசன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதன் பிறகு, சந்திரகாந்தி அம்மையார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் சாந்தி துரைசாமி, கடின உழைப்பும் நம்பிக்கையும் உயர்வை அளிக்கும் என கூறி விருதைப் பெற்றார்.
இதேபோல், கங்கா மருத்துவமனை தலைவர் மருத்துவர் S. ராஜசேகரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அவர், மாணவிகளுக்கு தொழில்நுட்ப உலகில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம் காண கல்வி முக்கியம் என கூறினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜி.ஆர்.ஜி. சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை கல்வி துவக்க விழா, வால்வோ இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் கமல் பாலி முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். அவர், லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்தியா வளர்ந்துவரும் நிலையில் இந்த துறையில் சாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை நிர்வாகிகள், கிருஷ்ணம்மாள் கல்லூரி துறை தலைவர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.