
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், 21-வது வார்டின் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாயில் தேங்கிய குப்பைகள் பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நிலை சுகாதார சீர்கேட்டுக்கும், நோய் தொற்று அபாயத்திற்கும் காரணமாக உள்ளது. இதை தீர்க்க தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மாநகராட்சியின் அலட்சியமே இந்த சாக்கடை பிரச்சனைக்கு காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் எச்சரித்தார்.
இந்த ஆய்வில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன், அமமுக திருச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் தர்கா கலிபா சாதாத், மாவட்ட மாணவரணி செயலாளர் நாகூர் மீரான், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சுகாதார பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
