
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோரிக்கை வைத்துள்ளார்.திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையிலான கூட்டத்தில், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநிலச் செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நோக்கம், இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய சமுதாயத்தை நல்ல வழியில் வழிநடத்துவதாகும் என அவர் தெரிவித்தார்.திருப்பரங்குன்றத்தில் தர்கா-கோவில் விவகாரம் மூலம், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்து-முஸ்லிம் மக்களிடையே மத வெறியை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார்.

“தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என கூறியதையும் அவர் கடுமையாக கண்டித்தார். இவ்வாறு பேசுபவர்களுக்கெதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. பேரிடர் காலத்திலும் முறையான நிவாரணம் வழங்கவில்லை. மேலும், கல்வித் திட்டங்களில் மத்திய அரசு கட்டாய விதிகளை விதிக்க முயல்கிறது. கல்வி உரிமையை பறிக்கும் இந்த போக்கை வன்மையாக எதிர்க்கிறோம் என்றார்.
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம்.மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை கண்டித்த வாலிபர், அவரது நண்பர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.இவற்றில், தமிழக அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.சாதி வாரி கணக்கெடுப்பு தேவை:”தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.”இஸ்லாமியர்கள் 7% இருப்பினும், அரசு 5% ஒதுக்கீடு அளித்தால் அதனை முதற்கட்டமாக ஏற்றுக் கொண்டு வரவேற்போம்” என தெரிவித்தார்.
