Saturday, September 13

கோவை அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா….

முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக முன்னாள் மாணவர் சங்கம் 91வது ஆண்டு விழா,சிறந்த முன்னாள் மாணவர்கள் விருது வழங்கும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவானது முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா....கோவை அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா....கோவை அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா....

கோவை அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா....

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மார்ட்டின் குழு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர். லீமாரோஸ் மார்ட்டின், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் திருமதி. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன், ஜெயந்த ஶ்ரீ பாலகிருஷ்ணன், பாலாஜி சரவணன், ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு கல்லூரி முதல்வர் திருமதி .மெய். இரா. எழிலி, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஜெயசந்திரன், ரூட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு முதன்மை அலுவலர் கவிதாசன்,மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயராமன், செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் என ஏராளமான முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதையும் படிக்க  கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச சந்திப்பு நிகழ்ச்சி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *