Monday, September 15

சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, படுகொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், ஜகுபர் அலி குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டம் அமைத்தது.

சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி முன்னிலையில், தமிழ் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் சிறப்புப் பங்கேற்பு அளித்து, ஜகுபர் அலிக்கு நீதி தேடி கண்டன உரையாற்றினார்.

சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

முன்னதாக, மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்புரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், SDTU தொழிற்சங்க ஊடக அணி நிர்வாகி சலீம், மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ், மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முகமது, மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இறுதியில், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு) நன்றியுரையாற்றினார்.

இதையும் படிக்க  விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *