சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில், திமுக 11வது வார்டு செயலாளர் அப்துல் ஜாபர் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகி லட்சுமணன், மதுபோதையில் நேஷனல் மளிகைக் கடைக்கு சென்றனர். கடை ஆயிப்கான் என்பவருக்கு சொந்தமானது, மேலும் தேவகோட்டை ராம்நகர் எழுவன்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.
கடைக்காரர் பொருட்களை இலவசமாக வழங்க மறுத்ததை தொடர்ந்து, இருவரும் கடையில் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் CCTV கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
கடை உரிமையாளர் சரவணன், தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) கௌதம் நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.CCTV காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.