
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில், 2B நம்பர் தமிழ்நாடு அரசு பேருந்து இன்று இரவு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் போது ஆரியபவன் அருகே பழுதடைந்து நின்றது.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகளும், அருகில் நின்றிருந்த கல்லூரி மாணவர்களும் இணைந்து பேருந்தை தள்ளி நகர்த்த முயன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேருந்துகளை முறையாக பராமரிக்காததின் விளைவாக அவை வழித்தடங்களில் பழுதாகி நின்று போக்குவரத்துக்கு இடையூறாகின்றன. இது போன்ற சம்பவங்கள் மின் கம்பங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மோதும் கோர விபத்துகளுக்கும் காரணமாக இருக்கலாம்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசு போக்குவரத்து துறையின் பராமரிப்பு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.