!["டேங்கர் லாரி விபத்து: ஒருவர் பலி,ஓட்டுநர் மாயம்"<br><br> "டேங்கர் லாரி விபத்து: ஒருவர் பலி,ஓட்டுநர் மாயம்"<br><br>](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/VideoCapture_20250112-204707.jpg)
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொச்சினில் இருந்து தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த ஒருவர் பலியானதும், மற்றொருவர் படுகாயம் அடைந்ததும், ஓட்டுநர் மாயமானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை மானாமதுரை சிப்காட் பின்புறம் தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. கேரள மாநிலம் கொச்சினிலிருந்து தார் ஏற்றிக் கொண்டு இராமநாதபுரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி முழுவதும் சிதறியதால், சம்பவம் அறிந்த காவல்துறையினர் வந்தபோது இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தனர். அவற்றை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்தவரின் பெயர் ஆஷிக், படுகாயம் அடைந்த நபரின் பெயர் அப்ஜித் என்று தெரியவந்துள்ளது. இருவரும் சகோதரர்கள் எனவும் தகவல் தெரிந்தது. அதே சமயம், ஓட்டுநர் மாயமாகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இப்போது காவல்துறை ஓட்டுநரை தேடி வருகின்றனர்.