Saturday, June 28

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 7 பேர் கைது…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்து, மகளிர் காவல் நிலையத்தில் இரு நாட்களாக ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் நல குழு சார்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் “எதாவது தவறுதலாக நடந்துள்ளதா?” என்று கேட்கும்போது, நான்கு மாணவிகள் தங்களது பயணம் செய்தபோது சிலர் அவர்களை தவறாக தொட்டதாகவும், முத்தம் கொடுத்ததாகவும், பலவிதமான பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக கூறினார்கள்.

இந்த புகாரின் பிறகு, மாணவிகளின் பெற்றோர்கள் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர் மற்றும் சம்பந்தப்பட்ட 7 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்தபின், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிய வரும். இதில், 7 பேரில் ஒருவர், கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் தாக்கப்பட்டு, தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 
இதையும் படிக்க  மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார்: விசாரணை மேற்கொண்ட குழு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *