Wednesday, September 10

பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 9-ஆம் வகுப்பில் படித்து வந்த சக்தி சோமையா (14) இன்று வகுப்பறையில் கம்ப்யூட்டர் இயக்கும் போது,இணைப்பு வயரை பிளக்கில் மாட்டியபோது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

அவர் அசுத்தமாகக் கீழே விழுந்ததை பார்த்த ஆசிரியர்கள் உடனே காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பினர்கள். பரிசோதனைக்கு பிறகு, மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறியதால், சாக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது. உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, மாணவனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்.

 
இதையும் படிக்க  மகளிர் உரிமை தொகை வழங்காததை எதிர்த்து சாலை மறியல் முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *