சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வின்னை முட்டும் அளவிற்கு புகை கிழம்பி, குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் அனுபவிக்க நேரிட்டனர்.
நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட இந்த பகுதி, குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள நகராட்சி பள்ளி, ரேசன் மண்ணெண்ணை பல்கும் ஆகியவை உள்ள இடமாக விளங்குகிறது. சமீப காலமாக, அந்த குப்பை கிடங்கின் அருகே சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்து செல்வதால், பல முறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து மாலையில் ஏற்பட்டது. தீயினால் புகை கிழம்பி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதியில் ஆழ்ந்தனர். தீயனைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டதும், இரண்டு மணி நேரம் தீயை அணைக்க போராடிய பின்னரே, தீயனைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முடிந்ததால், தண்ணீர் நிரப்பிக்கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள், இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் தெரிவித்துள்ளனர்.