Sunday, September 14

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (SI) பணிபுரிந்து வந்த பிரணிதா, தனது மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பணியிடை நீக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வின் முன்னணி விவரங்கள்:
பிப்ரவரி 5ஆம் தேதி இரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மாவட்ட நிர்வாகி உட்பட சிலர், புகார் மனு தொடர்பாக சோமநாதபுரம் காவல் நிலையம் வந்தனர்.

அப்போது, பிரணிதா மற்றும் விசிக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர், தன்னை அவர்கள் தாக்கியதாக பிரணிதா புகார் அளித்தார்.விசாரணையின் முடிவில்,
காவல்துறையின் ஆழமான விசாரணையில், பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை உறுதி செய்தது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவின்படி பிரணிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இதையும் படிக்க  காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *