சிவகங்கை மாவட்டம் கிருங்காங்கோட்டை கிராமத்துக்கு அருகே மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனம் கவிழ்ந்தவுடன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் சரக்குகள் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன, இதனால் சாலையில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு வழி எட்டியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த வாகனத்தில் பண்டல் பண்டலாக காய்ந்த இலைகள் ஏற்றிவந்ததை கண்டறிந்தனர். முதல் கட்ட விசாரணையில், இவை பீடி சுத்த பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருட்கள் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த இலைகள் உயர் ரக போதைப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் இலைகளா என்பது தொடர்பாக போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது, ராட்சச கிரேன்களை பயன்படுத்தி விபத்துக்குள்ளான வாகனம் மீட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு தொடர்பான முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.