சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் வீட்டில் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, முன்னாள் மாவட்ட செயலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையிலான போலீசார், இளையான்குடி சாலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கிடமான பதில்களை அளித்த வாகனத்தில் பயங்கர ஆயுதங்களை பிடித்து, ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் பேரில், அசாருதீன் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, 35 லட்சம் மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.