கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 2) அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்தவுடன், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.
இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் உள்மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து, டிசம்பர் 2 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மாவட்ட வாரியாக எச்சரிக்கை விவரங்கள்
சிவப்பு எச்சரிக்கை: கோவை, நீலகிரி.
ஆரஞ்சு எச்சரிக்கை: ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி.
லேசான மழை வாய்ப்பு: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி.
அதிக மழையால் சில இடங்களில் வெள்ளப் பாதிப்பு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டாம் நிலை எச்சரிக்கையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.