சிவகங்கை அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து  தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கோபால்(29). இவர்  கடந்த 2021 ஆம் ஆண்டில் சிறுமியை பாலியியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொலை  செய்ய முயற்சித்தது தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  5 ஆண்டுகள் தண்டனை பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச் சாலையில்  அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து  தப்பி ஓடியதாக தகவல் இன்று (ஜுன் 14) அதிகாரிகளுக்கு தெரியவந்தது.தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர்.
