Tuesday, January 28

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு  அருகே உள்ளது  வடசித்தூர் கிராமம். இங்கு ஏராளமான இந்து முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தீபாவளி நாளன்று மக்கள்  தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால்  அதனைத்தொடர்ந்து  தீபாவளிக்கு அடுத்த நாளில் அனைத்து மதத்தினரும் இனைந்து  வெளியூரில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களளை வீட்டிற்கு வரவழைத்து  ஜாதி மத பேதமின்றி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்  கறிவிருந்து  அளித்து மயிலந்தீபாவளியை கொண்டாடுவது  வழக்கம். ஆண்டுதோரும் நடைபெறும் இந்த மயிலந்தீபாவளி வழக்கம்  போல இந்த ஆண்டும்  வடசித்தூர் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இந்த மயிலந் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு ராட்டினங்கள்,  வளையல் கடைகள், உணவகங்கள், பேன்சி பொருட்கள் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. ராட்டினத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உட்கார்ந்து விளையாடினர். அதேபோல் பேன்சி கடைகளிலும், வளையல் கடைகளிலும் குழந்தைகளுக்கானா விளையாட்டு பொருட்களை வாங்கியும், பெரியவர்கள்  தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கினர்.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மேலும் விளையாட்டு திடலில் ஏராளமான இந்து முஸ்லீம் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர்  ஒருவருக்கொருவர் கை குலுக்கியும்  கட்டித்தழுவியும் மயிலந் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வண்ண நிற பட்டாசுகள் வெடித்து மயிலந் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்த மயிலம் தீபாவளியில் கோவை, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க  ரஷ்யா நடன கலைஞர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தரிசனம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *