
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, விமான கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் செல்லப்பட்டது. இன்று காலை 10:30 மணிக்கு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் இறுதியில் புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

