![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/IMG-20250128-WA0064-1024x577.jpg)
பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது, அதற்கிடையில் பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00723119125066500143027-1024x577.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00712513018477479664752-1024x577.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00736422734661653022958-1024x577.jpg)
பேரணியை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். பேரணி மகாலிங்கபுரம் நியூ ஸ்கீம் ரோடு பேருந்து நிலையம் வழியாக சென்றது. மாணவ மாணவிகள் ஹெல்மெட் அணிவதற்கான முக்கியத்துவம், வாகனங்களில் செல்லும் பொழுது செல் போன் பேசாதிருத்தல், காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது, மது போதையில் வாகனங்களை ஓட்டாமலிருத்தல், வாகனங்களின் ஆவணங்களை சரியாக வைத்திருத்தல் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டாதிருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00683432675941361768912-1024x577.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00696640792987828475602-1024x577.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00708141239640916188298-1024x577.jpg)
இவ்விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரியாஸ்கான், சுந்தர்ராஜ், முதல் நிலைக் காவலர் சசிகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பிரபு, சசிகுமார், பவிதா, காளிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00655826431488326609748-1024x576.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00667277403224446433986-1024x577.jpg)
![ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/img-20250128-wa00675392907076891997586-1024x577.jpg)