Thursday, October 30

பாஜக நிர்வாகி நியமனத்தில் பரபரப்பு: பொள்ளாச்சியில் எதிர்ப்பு போஸ்டர்கள்

பாஜக கோவை தெற்கு மாவட்ட புதிய தலைவர் நியமனத்தை பாஜக நிர்வாகிகள் பலரும் எதிர்த்து, பொள்ளாச்சி மற்றும் பல பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கோவை தெற்கு மாவட்டத்தில், பழைய தலைவர் வசந்த ராஜன் கட்சி விதிகளுக்கு அமைய மூன்று ஆண்டுகள் செயல்பட்ட பிறகு, புதிய தலைவராக சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னதாக பாஜக நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றிய சந்திரகுமார், ரூ.10 லட்சம் ஏமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால், பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி உருவாகி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பாஜக மூத்த நிர்வாகி எம்.ஏ.என். நடராஜன் கூறுகையில், “அண்ணாமலைவின் தலைமையில் கட்சி பெரிதும் வளர்ந்துள்ளது. ஆனால், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரகுமார், மாநில தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக கூறியவர் என்பதால், அவர் நியமனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னைக்கு சென்று, மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய தலைவர் நட்டாவிடம் சந்தித்து புதிய தலைவரை நியமிக்க வலியுறுத்த உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

 
இதையும் படிக்க  நிழல் தரும் மரங்களை வெட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *