
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அருகிலுள்ள அரசம்பாளையம்-காரச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிரப்பும் ஆலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் வேலை செய்து வந்தனர்.


நேற்று இரவு, அங்குப் பணிபுரியும் ஒரு சிறுவனின் பிறந்தநாளை வட மாநில தொழிலாளர்கள் மது விருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். மது அருந்திய பிறகு, தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் ராய்சேன் பகுதியைச் சேர்ந்த பூபேந்திரா (21) மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் சாருப் (20) மற்றும் மற்றொரு 17 வயது சிறுவன், பூபேந்திராவை இரும்புக் கம்பியால் தாக்கினர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பூபேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

