Thursday, October 30

பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அருவாள்களை வைத்து சீட் பிடித்த தொழிலாளர்கள்

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இன்று பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. காலை நேரத்தில், 5.C – TN 38 N 3544 அரசு பேருந்தில், இரண்டு தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், தங்களின் கருவியாகும் அருவாள்களை எடுத்து, அவற்றை சீட்டில் வைத்துவிட்டு, பயணிகள் இடமிருந்து சீட் பிடித்துக் கொண்டு, கீழே இறங்கி தேநீர் குடித்தனர்.

பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அருவாள்களை வைத்து சீட் பிடித்த தொழிலாளர்கள்
பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அருவாள்களை வைத்து சீட் பிடித்த தொழிலாளர்கள்

பயணிகள் அறிந்ததும், ஒருவர் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து, அதை சமூக வளைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு, பேருந்து நிலையத்தில் மற்றும் அருகிலுள்ள மற்ற பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு இது வழக்கமான வேலை உபகரணமாக இருந்தாலும், சமூகத்தில் ஏற்பட்ட பரபரப்பு மற்றும் பயணிகளின் அச்சம் பரிதாபகரமாக மாறியுள்ளது.

பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அருவாள்களை வைத்து சீட் பிடித்த தொழிலாளர்கள்
 
இதையும் படிக்க  கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *