பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்வன பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றி வந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவ்வழியில் செல்லும் போது யானையின் நடமாட்டத்தை கவனமாகப் பார்ப்பதற்கு வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் நவமலை பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது இரண்டு பணியாளர்கள், அப்பர் ஆழியார் செல்லும் போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த யானை பொலிரோ கார் மீது தாக்கியது. அதன் விளைவாக, கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணம் செய்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனால் அந்தப் பகுதியிலுள்ள சூழல் பரபரப்பாகி உள்ளது.