Tuesday, April 22

15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

15ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை வட்டாட்சியர் மேரி வினிதா கொடியசைத்து தொடங்கினார்.

15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி, பொதுமக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், கோவை ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர், அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.

உறுதிமொழி: “இந்தியக் குடிமக்களாகிய நாம், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம். எவ்வித அச்சம் இன்றி, மதம், இனங்கள், சாதி, சமூகத் தாக்கம் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றி, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்போம்.”

15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

இது தொடர்ந்து, இளம் வாக்காளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு சார்ந்த ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆராய்ச்சியர் நேர்முக உதவியாளர் விஜயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் பட்டுராஜ், சுந்தர்ராஜ், அரசு கல்லூரி ஆசிரியர்கள், வருவாய் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  நேதாஜி:128வது பிறந்த நாள் விழா
15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *