நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாஜக மண்டல துணை தலைவர் ப. பூபாலான் மண்டல பாஜக எம் செந்தில் (எ) பித்தா ஜி, தலைமையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
10 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பொதுமக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முதல் நாளான இன்று கணபதி ஹோமம், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் இரண்டாம் நாள் அன்னதானமும் மூன்றாவது நாள் விநாயகர் விஜர்ஜன ஊர்வலம் நடைபெறும்.
இந்த விழாவில் சமூக ஊடகப்பிரிவு ஆர் பிரதாப், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வேணுகோபால், பாஜக பொதுச்செயலாளர் அச்சப்பன், பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ஆர் உமேஷ் பாபு, ஊடகப்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர்கள் பி ஹரி கிருஷ்ணன்,ஆ நிர்மல் சின்னராஜ் ஆ ஆருண்ராஜ் கே நாகேந்திரன், ஆ பூரி கம்மல் ஜி, பி சண்முகசுந்தரம், வடவள்ளி ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.