கள்ளச்சாராய மரணம் 49 ஆக உயர்வு….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30  பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் தெரிவித்தார்.கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை உயர் சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் 114 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

இதையும் படிக்க  கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அகழ்வாய்வில் கலப்பை கொழுமுனை கண்டுபிடிப்பு....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளச்சாராயம் விவகாரம்:மேலும் ஒரு முக்கிய நபர் கைது

Fri Jun 21 , 2024
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளத நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.49 பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜுன்21) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் புதுச்சேரியில் இருந்து சாராய உற்பத்திக்கு தேவையான […]
kallakurichi 1 - கள்ளச்சாராயம் விவகாரம்:மேலும் ஒரு முக்கிய நபர் கைது

You May Like