தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுப்புகள் மாநிலம் முழுவதும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை சந்தைகள் உள்ளிட்ட அனைத்து விற்பனை அலகுகள் மூலம் கிடைக்கும்.
தொகுப்புகளின் விவரம்:
1. இனிப்பு பொங்கல் தொகுப்பு – ரூ.199
பச்சரிசி (BPT 43): 500 கிராம்
பாகு வெல்லம்: 500 கிராம்
ஏலக்காய்: 5 கிராம்
முந்திரி: 50 கிராம்
ஆவின் நெய்: 50 கிராம்
பாசி பருப்பு: 100 கிராம்
உலர் திராட்சை: 50 கிராம்
சிறிய பை: 1
2. சிறப்பு பொங்கல் தொகுப்பு – ரூ.499
மஞ்சள் தூள் – 50 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
துவரம் பருப்பு – 250 கிராம்
பாசிப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
செக்கு கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்
மளிகைப் பொருட்கள் – 15+ வகைகள்
மளிகை பை – 1
3. பெரும் பொங்கல் தொகுப்பு – ரூ.999
25+ பொருட்கள் அடங்கிய பெரிய தொகுப்பு
வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்கள்
ராகி மாவு, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்கள்
விலையில்லாமல் 500 கிராம் நாட்டு சர்க்கரை வழங்கப்படும்
இவை அனைத்தும் பொதுமக்களின் பொருளாதார நிலைப்படி அளவான விலையில் வழங்கப்படுவதால், பண்டிகை கொண்டாட்டங்களை இனிமையாக மாற்ற உதவும் என்று அரசுத்துறை உறுதிபட தெரிவித்துள்ளது.
உங்கள் மாவட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தொடர்பு கொள்ளலாம்.