மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலுள்ள காந்தி சிலைக்கும், ஸ்ரீரங்கம் காமராஜர் பவுனில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ. ஜெயம் கோபி (எ) சுதர்சனம் தலைமையிலானது. திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். அகில் (எ) தர்மேஷ் முன்னிலையில், மூத்த தலைவர் பிச்சுமணி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பொன் தமிழரசன் மற்றும் ராமானுஜம், கோட்ட துணைத் தலைவர் செல்வி குமரன், வார்டு தலைவர்கள் பூபதி, யோகநாதன், மற்றும் வார்டு நிர்வாகி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related
Thu Oct 3 , 2024
பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி 36 சிறிய படகுகளை வாங்கியுள்ளது. இதனுடன், மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும், மாதவரம் பகுதிக்கு 1 படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழை காலத்தின்போது பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்க இந்த படகுகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://x.com/chennaicorp/status/1841511989530804641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841511989530804641%7Ctwgr%5E2d4ea5dbcfa276e0079708eddc495bda422a6f25%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.dinamani.com%2Ftamilnadu%2F2024%2FOct%2F03 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மூன்றாவது வாரத்தில் […]