Wednesday, February 5

புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார். குனியமுத்தூர் பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பில் பூங்கா அபிவிருத்தி, ராமசெட்டி பாளையத்தில் ரூ.62.60 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், முத்துச்சாமி காலனியில் ரூ.18 லட்சம் மதிப்பில் இரும்பு பாலம், செல்வபுரத்தில் ரூ.8.90 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், தேவாங்க ஆரம்பப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

இதில், 30.93 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், 860 கிலோமீட்டர் தார் சாலைகள் ரூ.415 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், விடுபட்ட சாலைகளுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கோவை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கான திட்டங்களை நேரடியாக கண்காணித்து, விரைவாக செயல்படுத்தி வருவதாகவும், மக்கள் நலனுக்கான அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும் உறுதிப்படுத்தினார்.

இதையும் படிக்க  25வது சந்தர் நினைவு கார் பந்தயம்: வெற்றி பரிசு ரூ.1 லட்சம்
புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காந்தி குமார், மேயர் கா. ரங்கநாயகி, நகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி. ப. ராஜ்குமார், ஈஸ்வரசாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *