Thursday, October 30

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை…

கோவை மாவட்டத்தில் சிறப்புமிக்க அம்மன் கோயில்களில் ஒன்றான ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய அங்கமான மயான பூஜை நள்ளிரவில் மிகுந்த பக்திபரவசத்தில் நடத்தப்பட்டது.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...

மயான பூஜையின் முக்கிய நிகழ்வுகள்:
மாசாணியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20க்கும் மேற்பட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் தாங்கி ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு பம்பை இசையின் முழக்கத்துடன் சென்றனர்.

மண்ணால் உருவாக்கப்பட்ட மயான தேவதையின் சயன கோலத்தை மறைத்திருந்த திரை நள்ளிரவு 2 மணிக்கு விலக்கப்பட்டது.அருளாளி அருண், அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியவாறு பம்பை இசையின் சத்தத்தில் நடனம் ஆடினார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...

பின்னர் பட்டுசேலையில் பிடி மண்ணை எடுத்தார், இதனுடன் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த அபூர்வ நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 100க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அடுத்த கட்ட விழாக்கள்:
வியாழக்கிழமை (நாளை) இரவு 10 மணிக்கு – குண்டம் பூ வளர்த்தல்
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு – குண்டம் இறங்குதல்.இந்நிகழ்வுகள் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதையும் படிக்க  இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 17,155 ஆக உயர்வு
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை...
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *