Wednesday, February 5

தேமுதிக ஆர்ப்பாட்டம்: பொங்கல் பரிசு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு கோரிக்கை!

தேமுதிக சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் ஆணைப்படி, கோவை மாநகர மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும், மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கஞ்சா போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தேமுதிக ஆர்ப்பாட்டம்: பொங்கல் பரிசு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு கோரிக்கை!<br><br>

காந்திபுரம் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வின் போது, கோவை மாவட்ட செயலாளர் சந்துரு செய்தியாளர்களிடம் பேசியதாவது: “மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு முக்கியமானது. தமிழக அரசு இவை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க  புதிய திட்டங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்
தேமுதிக ஆர்ப்பாட்டம்: பொங்கல் பரிசு மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு கோரிக்கை!<br><br>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *