பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தி வரும், ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் “ரேபிட்டோ செயலி” மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம், காந்திபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த நபர்கள் இன்று மதியம் ஒரு மணி அளவில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.