Wednesday, February 5

கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கோயம்புத்தூர் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கல்விசார்குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர்களுக்கும் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டினார்.

இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பங்கஜ் பெற்றார். 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களும், 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100/100 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார்பாடி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் ப.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கோவை மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், கோவை மாவட்ட இடைநிலைப் பள்ளிக்கல்வி அலுவலர் கோமதி, பொள்ளாச்சி கல்வி மாவட்ட இடைநிலைப்பள்ளிக் கல்வி அலுவலர் பானுமதி மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் 240க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 3500 ஆசிரியர்கள் மற்றும் பெருமக்கள் பங்கேற்றனர். கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் வரவேற்புரை ஆற்றினார், பின்னர் ஜி.ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சரவணக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மணிமாறன் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அந்தோணி மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க  "மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளியில் விவசாயம் குறித்து பேசி"
கோவையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *