சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி


கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா நகரில், சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஜி ஆர் டி கலைக்கல்லூரி இணைந்து சிட்டுக்குருவிகளுக்கான கூடு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கான சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் குறித்த பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறைவதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

img 20240930 wa00033953876897228090466 | சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன், குறைந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு செயற்கை கூடுகள் அமைப்பதன் மூலம் வாழ்விடம் வழங்கி, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற விழிப்புணர்வு உரையாற்றினார்.

மேலும், மாணவர்களுக்கு, கூடுகளை எந்த இடங்களில் பொருத்த வேண்டும், அவற்றை எப்படி பொருத்துவது என தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு, செய்முறையில் பயிற்சியும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மருத்துவர் தாமரைச்செல்வன் மற்றும் இயற்கை விவசாயி முத்து முருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சி நிறைவில் ஆனந்த்குமார் நன்றி தெரிவித்தார்.

img 20240930 wa0004712258473472309157 | சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதையும் படிக்க  திருச்சி: TET தேர்ச்சியாளர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டம் - திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

Mon Sep 30 , 2024
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பெற்றனர். இந்த தடகள போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்று […]
IMG 20240930 WA0010 | தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு