திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், அமெரிக்காவில் உள்ள தமிழக முதல்வர், 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் மின்சாதன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்தார். இதன் மூலம் சுமார் 5000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் பேச்சாளர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.
மத்திய அரசிடம் அனைத்து திட்டங்களுக்காக போராடித்தான் நிதி பெற்றதாகவும், தற்போதைய நிலுவையில் உள்ள நிதியையும் மீண்டும் போராடி பெறுவோம் என உறுதியளித்தார்.
பாஜகவினர் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி விவகாரம் குறித்து பேசாமல், மகாவிஷ்ணு விவகாரம் குறித்து திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று எதிர்க்கட்சிகளை அவர் விமர்சித்தார்.