Sunday, December 22

Tag: pink auto

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்: விண்ணப்பிக்க அவகாசம் டிசம்பர் 10 வரை நீட்டிப்பு

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்: விண்ணப்பிக்க அவகாசம் டிசம்பர் 10 வரை நீட்டிப்பு

தமிழ்நாடு
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, தமிழக அரசு அறிமுகப்படுத்திய `இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தின் விண்ணப்ப கால அவகாசம் டிசம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், இந்த திட்டத்தின் மூலம் சென்னை நகரில் பெண் ஓட்டுநர்கள் இயக்கும் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. அவசர காலங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு, ஒவ்வொரு ஆட்டோவிலும் காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய, கீழ்காணும் தகுதிகள் அவசியம்: பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை. 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம...