தமிழகத்தை நோக்கி புயல் – பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறும் இந்த மண்டலம் அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்படுகிறது.
புயலுக்கு 'ஃபெங்கல்' என பெயர் சூட்டப்படுகிறது:
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த 'ஃபெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 2 வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக,
ஆரஞ்சு நிற எச்சரிக்கை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளை...