ஜார்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், “மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையி...