
மல்லசமுத்திரம் அரசு பள்ளி புதிய அடையாளம் பெற்றது…
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பெயர் பலகையில் இருந்த "அரிசன் காலனி" என்ற பெயர் மாற்றப்பட்டு, "மல்லசமுத்திரம் கிழக்கு" என மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.அன்பழகன், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கு கடிதம் எழுதி, பழமையான மற்றும் வேறுபாடு உண்டாக்கும் பெயரை அகற்ற கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆணையம் இப்பெயர் மாற்றத்திற்கான உத்தரவை வெளியிட்டது.
நேற்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மல்லசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு நேரில் விஜயம் செய்தார். அவரின் தலைமையில், "அரிசன் காலனி" என்று இருந்த பகுதியை கருப்பு பெயிண்டால் மூடினார். பின்னர், பெயர் மாற்றத்துக்கான அரசாணையை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
மேலும், இப்பெயர் மாற்றத்திற்கு முன்னுதவி செய்த முதியவர் கணேசன் மற்றும் வழக்...