சூறாவளி காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் வாழை பயிர்கள் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து அப்பகுதியில் ஆய்வுக்காக வந்த அமைச்சர் முத்துசாமி விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் ஆனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித இழப்பீட்டுத் தொகையும் வழங்காததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி -பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதமடைந்த வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழை கன்றுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ...