சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து 2018-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்தில் வழங்கி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் இருந்து 30-0க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தானில் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
10 கிமீ,5 கிமீ,3 கிமீ மற்றும் 1கிமீ என நான்கு வெவ்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு நரம்பியல் குழந்தைகளுக்காக 1 கிமீ வகையை மாரத்தான் போட்டி நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 3 கிமீ,5 கிமீ மற்றும் 10 கிமீ பிரிவுகளில் இதில் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைத்து பங்குபெற சரியான உள்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் திறன் என்பது ஊனத்திலிருந்து வேறுபட்டது என்ற புரிதலை உணர்த்தும் வகையில் இந்த முயற்சி செயல்படும் என டாக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.