கோவை மாவட்டம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது.
தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற ,இதன் துவக்க நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மேயர் ரங்க நாயகி கலந்து கொண்டு மாரத்தானை துவக்கி வைத்தார்.
இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,
18 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த மாரத்தான் கோவில் பாளையம் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்பாக துவங்கி அவினாசி சாலை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நிறைவு பெற்றது..
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை தலைவர், டாக்டர் நல்லா ஜி பழனிசாமி , ‘கோவையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல்,. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துவதாகவும், பக்கவாத தொடர்பான நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை விரைவாகவும் முன் கூட்டியே எடுத்தால் பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பெரும்பாலான பின்விளைவுகளைத் தவிர்த்துவிடலாம் என்று தெரிவித்தார்
இந்த விழிப்புணர்வு மாராத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி,நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்