கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்படும் திஷா இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அளவிலான கொரிய தற்காப்புக் கலையான டேக் கொண்டோ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
14, 17, 19 வயதினரை தனித் பிரிவாக பிரித்து, 69 பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் போது மாணவர்கள் காலால் உதைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள், முதல் முறையாக சர்வதேச அளவிலான போட்டிகளில் பயன்படுத்தப்படும் சென்சார் முறையினைப் பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெறும் மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.