புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை…

விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை முதலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதலே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்குபால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், உற்சவர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க  புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி

மேலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது போன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா

Sat Sep 7 , 2024
தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு மார்க்கெட் ரோட்டில்ல வசிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மாட்டு சந்தையில் உள்ள விநாயகருக்கு சீர்வரிசையாக விநாயகர் சிலை, ஆப்பிள் , ஆரஞ்சு மாலை , இனிப்பு வகைகளுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர் அவர்களை மாட்டு […]
WhatsApp Image 2024 09 07 at 12.30.06 PM 1 - இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா

You May Like