Wednesday, January 15

புதுச்சேரியில் நாளை அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கக் கோரி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) அதிமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலர் அ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அவற்றைத் தடுக்க புதிய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் காரணமாக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தமிழகத்தில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய புதுச்சேரி பிரமுகர்களை போலீசார் விசாரிக்காமல் இருப்பது தவறு. எனவே மதுவிலக்கு நடவடிக்கையில் புதுவை அரசின் பலவீனத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் அண்ணா சாலை, நேரு சாலை, பஸ்சி சாலை, மிஷன் சாலை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  "புதுச்சேரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *