புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரி இருசக்கர வாகனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், நகரப் பகுதியில் 5000-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதற்கான நிலையை ஏற்படுத்தும் பேட்டரி இருசக்கர வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சுற்றுலா பயணிகளை குறிவைத்து, 4000-க்கும் மேற்பட்ட பதிவு எண்கள் இல்லாத பேட்டரி இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு, ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இதனால், அரசின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாதுறையின் அனுமதி இல்லாமல் இயங்கும் இந்த இருசக்கர வாகனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக மனு கோரியுள்ளது.
Leave a Reply