![அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா](https://thenewsoutlook.com/wp-content/uploads/2025/01/IMG-20250115-WA0051-1024x576.jpg)
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, அதிமுக மாநில அம்மா பேரவை செயலாளரும், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் மற்றும் அவரது துணைவியார் கன்னிய செல்வி பாஸ்கர், மகள் ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி சிறப்பித்தனர்.
விழாவில், முதலியார் பேட்டை தொகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.